Friday, May 6, 2011

ஏன் சந்நியாசிகள் மாமிசம் சாப்பிடுவதில்லை?

ஏன் சந்நியாசிகள் மாமிசம் சாப்பிடுவதில்லை?   மாமிசத்திற்கும் காமத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. மாமிசம் உடலில் "அந்த" சக்தியை மிக அதிகமாக்குகின்றது.  (மாபிள்ளைக்கு நாட்டுக்கோழி அடிச்சு கொழம்பு வைங்க அப்படின்னு சொல்றாங்க இல்ல அது இதுக்குத்தான். ) அதை வெளியேற்றியே ஆகவேண்டிய நிலைக்கு ஒருவன் தள்ளப்படுகிறான். இந்த நிலையை தவிர்ப்பதற்க்காகவே சந்நியாசிகள் மாமிசம் புசிப்பதில்லை.  இந்த நிலைக்கு ஒருவன் தள்ளப்பட்டால் அவன் எப்படி சந்நியாசத்தை கடைபிடிக்க முடியும். நித்தியானந்தா மாதிரி  அல்லவா ஆக நேரிடும்.  (விதிவிலக்காக திபெத்திய துறவிகள் மாமிசம் மறுப்பதில்லை, அவர்கள் குளிரான பகுதியில் வசிப்பதால் உடலில் வெப்ப நிலையை சீர் செய்ய இது உதவுகின்றது. ஆதலால் அவர்கள் மாமிசம் மறுப்பதில்லை. )   உயிர்களை கொல்லுதல் கூடாது என்பதும் ஒரு காரணம்.   மாமிசம் சாப்பிடுதல் உடலில் துர்நாற்றமுள்ள வியர்வையை உருவாக்குகின்றது.  இதை அவர்கள் விரும்புவதில்லை. "நீ எதை புசிக்கிறாயோ அதுவாவாய்" என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை உள்ளது. ( மாமிசம் உண்டால் அந்த மிருகத்திற்குண்டான மிருகத்தனமும், காமும் ஏற்படும்). மாமிசம் மறுப்பதால் மனிதன்  நீண்ட காலம் இளமையுடன் வாழ முடியும்.  இன்னும் பல காரணங்கள் இருந்தும் இந்த சில காரணங்களினாலும் சந்நியாசிகள் மாமிசம் புசிப்பதில்லை.  (உங்களில்  பல  பேருக்கு  இதை  பற்றி  தெரிந்திருக்கும்  என  நினைக்கின்றேன்)   நாம் உயிர் வாழ ஆசைப்படுவது போல எல்லா உயிர்களுக்கும் அந்த உரிமை உண்டு.. அந்த வான் புகழ் வள்ளுவனும் தனது வள்ளுவத்தின் அறத்துப் பாலில், புலான் மறுத்தல் என்னும் அதிகாரத்தின் 260 -ஆவது குறட்பாவில் இதனைப் பற்றித் தெளிவு படுத்தியுள்ளார்.    260. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும்.   இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.

No comments:

Post a Comment